சாமி பக்தின்னு வந்துட்டா யோகி பாபுவை அடிச்சிக்கவே முடியாது….விநாயகரை விரும்பி கும்பிடும் நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சிறிய சிறிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் தனது கால் தடத்தினை பதித்தார்.தனது கடினமான முயற்சியினால் வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று சாதித்தும் உள்ளார்.ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் இன்று தனது கடின உழைப்பினால்,விஜய்,அஜித்,சூப்பர் ஸ்டார் படம் வரைக்கும் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

சாமி பக்தின்னு வந்துட்டா யோகி பாபுவை அடிச்சிக்கவே முடியாது....விநாயகரை விரும்பி கும்பிடும் நடிகர் யோகி பாபு 1

விளம்பரம்

நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சில படங்கள் நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சுகளினால் இன்று இந்தளவு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நுழைந்துள்ளார்.இவர் கதாநாயகனாக நடித்ததிலேயே மண்டேலா படம் மக்களிடம் அதிகம் வரவேற்பினை பெற்ற படம் ஆகும்.பல வெற்றி மற்றும் பல தோல்வி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.இவர் நகைச்சுவைக்காகவே ஓடிய படங்களும் உண்டு.அந்தளவிற்கு மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் யோகி பாபு.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

சாமி பக்தின்னு வந்துட்டா யோகி பாபுவை அடிச்சிக்கவே முடியாது....விநாயகரை விரும்பி கும்பிடும் நடிகர் யோகி பாபு 2

விளம்பரம்

இவருக்கு சாமி பக்தி அதிகம் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே,தனது சொந்த ஊரில் சொந்த செலவில் கோவில் கட்டியுள்ளார்.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டில் விநாயகரை வைத்து வழிபட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் யோகிபாபுவின் பக்தியை பாராட்டி வருகின்றனர்.மேலும் அவருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தாறுமாறாக MODERN ஆக மாறிய பிக் பாஸ் ஜூலி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment