பிரபல தயாரிப்பாளரை கல்யாணம் செய்துகொண்ட சித்தி சீரியல் நடிகை

தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரம் ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்துபவர் மகாலக்ஷ்மி.இவர் முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத நடிகர் விக்ரம் பிரபு மனைவி புகைப்படங்கள்

பிரபல தயாரிப்பாளரை கல்யாணம் செய்துகொண்ட சித்தி சீரியல் நடிகை 1

விளம்பரம்

தற்போது நடிகை மகாலட்சுமி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திடீர் திருமணம் ரசிகர்ளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லிப்ரா ப்ரொடக்சன் தயாரித்த கட்சி படம் சாந்தனு நடிப்பில் வெளியாகிய முருங்கைக்காய் சிப்ஸ்.இப்படத்திற்கு பிறகு தற்போது ரவீந்தர் எந்த தயாரிப்பு பக்கமும் செல்லவில்லை.விரைவில் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

பிரபல தயாரிப்பாளரை கல்யாணம் செய்துகொண்ட சித்தி சீரியல் நடிகை 2

விளம்பரம்

இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது ,இதனை பார்த்த ரசிகர்கள் இருவரையும் வாழ்த்தி வருகின்றனர்.இந்த புகைப்படங்களை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு ,மகாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க,இப்போ அந்த மகாலட்சுமியே கிடைத்தால் என பதிவிட்டு குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி என கூறி இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment