The Indian Times

கல்யாணத்தில் மனைவியை கொஞ்சி கலாட்டா செய்யும் CWC புகழ் | PUGAZH MARRIAGE VIDEO

பல கனவுகளுடன் சென்னை வந்தவர்களில் ஒருவர் புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெறியுடன் போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது..இதனை பயன்படுத்தி விஜய்டிவியில் அடியெடுத்து வைத்தார் புகழ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என தனது முழுத்திறமைகளையும் காண்பித்து புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார்.அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

Advertisement

இவர் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த பென்ஸ் ரியா என்பவரை நேற்று மனம் முடித்தார் .இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் நேற்று இணையத்தில் பெருமளவு வைரலாகியது,பல ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் புகழுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தற்போது புகழ் கல்யாண வீட்டில் அடித்த லூட்டி வீடியோ வெளியாகியுள்ளது.இந்த வீடியோவை புகழ் ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து பெருமளவு வைரலாக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in