The Indian Times

BIGG BOSS கொண்டாட்டத்தில் விக்ரமன் அசீம் பயங்கர மோதல்… அதிர்ச்சியாகிய ரசிகர்கள்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல்தொடங்கி முடிவடைந்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் அசீம் பிக் பாஸ் கோப்பையை தட்டி சென்றார். தற்போது விஜய் தொலைக்காட்சி கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி ,ப்ரோமோவில் விக்ரமனிடம் தொகுப்பாளினி ப்ரியங்கா யார் அதிக கிசுகிசு வீட்டில் பேசுவது என்று கேட்கவே,அதற்கு விக்ரமன் அசீம் என கூறியுள்ளார்,இதனால் காண்டாகிய அசீம்,வீட்டில் அவரே கிசுகிசு பேசிவிட்டு பிறரை சொல்வது தான் எனக்கு சிரிப்பை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.இதனால் இவர்களுக்கு இடையே இன்னும் சண்டை ஒயவில்லையா என ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,

Embed video credits : Vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in