The Indian Times

கடைசில ஆக்டொபஸ் காமிச்சு சப்பையாக்கிட்டாங்க… கேப்டன் PUBLIC REVIEW

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.அந்த வகையில் தற்போது அந்த லிஸ்டில் கேப்டன் படமும் இணைந்துள்ளது.இப்படம் ஏலியன்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆகும்

Advertisement

இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் காலை முதலே ஆர்வமாக குழந்தைகளுடன் படத்தினை பார்த்து வெளியே வருகின்றனர்.வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,கிராபிக்ஸ் சரியாக இல்லை,ஏலியன் பொம்மை போல உள்ளது,கிளைமாக்சில் ஏலியனை காண்பித்து கிங்னு சொல்லி சப்பையாகிட்டாங்க என கருத்து தெரிவித்து வருகின்றனர் மேலும் முதல் பாதி அதிக நீளமாக உள்ளது,தமிழ் சினிமாவில் எடுத்த முதல் ஏலியன் படம் என்பதால் பார்க்கலாம் மற்றபடி வேறே ஒன்றும் இல்லை என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : SHURTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in