The Indian Times

அனிருத்தை ஓரம்கட்டிய யுவன்..வெறித்தனமான இசையில் வெளியாகிய நானே வருவேன் படத்தின் வீரா சூரா பாடல் | NANE VARUVEN FIRST SINGLE

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில்நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தெலுங்கில் சார் படத்திலும் ,இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் நடித்து வருகிறார்.இதில் தனுஷுக்கு அடுத்ததாக அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் நானே வருவேன் படம் வெளியாக உள்ளது.நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் வெளிவரும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது

Advertisement

கலைப்புலி தாணு இப்படத்தினை தயாரிக்க ,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தின் வீரா சூரா என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்பாடலை செல்வராகவன் எழுதியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இப்பாடலை பாடியுள்ளார்.இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : Saregama Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in