கலக்கீட்டீங்க பார்த்திபன்…இரவின் நிழல் படம் பார்த்து பார்த்திபனை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்

நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.இந்த தேசிய விருது அளித்த உத்வேகத்தில் மீண்டும் அதேபோல் புதிய படத்தினை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார். மீண்டும் இவர் கதை எழுதி ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

கலக்கீட்டீங்க பார்த்திபன்...இரவின் நிழல் படம் பார்த்து பார்த்திபனை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின் 1

விளம்பரம்

இவருடன் வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்..இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மைக்கை தூக்கி பார்த்திபன் எறிந்தது இணையத்தில் பெரும் வைரலாகியது.தற்போது இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்கள் படம் எப்படி இருக்கும் என ஆவலாக பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

கலக்கீட்டீங்க பார்த்திபன்...இரவின் நிழல் படம் பார்த்து பார்த்திபனை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின் 2

விளம்பரம்

தற்போது இப்படத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்த்திபன் உடன் இணைந்து பார்த்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது, ட்வீட்டர் எதிலும் தனிப்பாணி அதுதான் பார்த்திபன்,ஒத்த செருப்பு படத்துக்கு பிறகு ஒத்த ஷாட் படம்.இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்ப திறன் தமிழ் திரையுலகின் தொழில்நுட்ப திறன் உயரம்.நான் லீனியர் சிங்கிள் ஷாட் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.இதனால் பார்த்திபன் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment