The Indian Times

STATE FIRST JUST MISS போலயே…இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா மார்க் ஷீட்

தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தெலுங்கில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் கால் தடம் பதித்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை தெலுங்கில் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் நடிகை சமந்தா.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.இப்படத்தினை தொடர்ந்து தமிழுலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Advertisement

அண்மையில் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடி திரையுலகையே கலக்கினார்.இப்படம் பெரும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்துவிட்டார்.தற்போது தெலுங்கில் குஷி படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார்.அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.தமிழ் தெலுங்கு என மாறி மாறி ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் சமந்தா

Advertisement

தற்போது நடிகை சமந்தாவின் 10மற்றும்  11ஆம் வகுப்பு பள்ளி  மார்க் சீட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் கணிதத்தில் 200க்கு 198 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.மேலும் பல பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களை எடுத்து அசத்தியுள்ளார் சமந்தா.இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நல்ல படிச்சும் 10,12 ல ஏன் இவங்க மாநிலத்தில் முதல் மாணவியாக வரவில்லை ஜஸ்ட் மிஸ் ஆகிட்டு போலயே என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

 

அதேபோல் 10 ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களை எடுத்துள்ளார் சமந்தா.இவ்வளவு நல்லா படிப்பாரா சமந்தா என ரசிகர்கள் ஆச்சரியமாக சமந்தாவின் பள்ளி மதிப்பெண் பட்டியலை பார்த்து வருகின்றனர்.இந்த மதிப்பெண் பட்டியல்கள்  தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in