The Indian Times

Director ஷங்கர் பொண்ணுடன் மரண குத்தாட்டம் போடும் கார்த்தி

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர்.இயக்குனர் ஆக வேண்டும் என கனவோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் இன்று மிக பெரிய நடிகராக மாறியுள்ளார்.வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தினை பிடித்துள்ளார் கார்த்தி.இவர் நடித்த பல படங்கள் இவருக்கு வெற்றியை மட்டுமே பெற்றுத்தந்துள்ளன.முதல் படத்திலேயே இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் படத்தில் கிராமத்து ஆளாக வந்த கார்த்தி அடுத்த படமான பையா படத்தில் மார்டன் ஆன சிட்டி பையனாக வந்து அசத்தி அனைவரையும் கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார்.முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியாகிய கொம்பன் படத்தினையும் இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.கொம்பன் படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.விருமன் படத்தில் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி அறிமுகம் ஆகியுள்ளார்.இவர்களுடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

Advertisement

இப்படத்தில் இருந்து அண்மையில் கஞ்சா பூவு கண்ணால பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருந்தது.இப்படத்தின் டீசர் மற்றும் பாடலை நாளை மதுரையில் பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.தற்போது இப்படத்தில் இருந்து மதுரவீரன் பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்பாடலில் நடனத்தில் அசத்தியுள்ளார் கதாநாயகி அதிதி சங்கர்,யுவன் சங்கர் ராஜா இசையில் பிரித்தெடுத்துள்ளார்.இந்த ப்ரோமோ முழு பாடலின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது

Embed video credits : Think music south

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in