தளபதி 67 அப்டேட் கேக்காதீங்க..மேடையில் கடுப்பாகிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் படத்தினை எடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இது சிவாங்கியா இல்லை சமந்தாவா..இவ்வளவு CUTE-ஆ இருக்காங்க

தளபதி 67 அப்டேட் கேக்காதீங்க..மேடையில் கடுப்பாகிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 1

விளம்பரம்

விக்ரம் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று 400கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் அடுத்து யாரை இயக்க போகிறார் என ஆவலாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அடுத்து தளபதி விஜயை வைத்து மீண்டும் படத்தினை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திலேயே உள்ளனர்.இந்நிலையில் அவர் பேட்டிகொடுக்கும் போதெல்லாம் தளபதி 67 படம் பற்றி கேட்டு வருகின்றனர்,அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூட,அதனை தயாரிப்பு நிறுவனம் தான் வெளியிடும் நான் கூற கூடாது அதான் விதிமுறை என தெரிவித்து இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  பகைவர்களை விரட்டி அடிக்கும் சோழர்கள் ... பொன்னியின் செல்வன் TRAILER இதோ 

தளபதி 67 அப்டேட் கேக்காதீங்க..மேடையில் கடுப்பாகிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 2

விளம்பரம்

தற்போது இவர் போதை ஒழிப்போம் என்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்டுள்ளார்.அங்கு மாணவர்கள் தன்னிடம் 5 கேள்விகள் வரை கேட்கலாம் அதற்கு பதிலளிப்பதாக கூறி இருந்தார்.இந்நிலையில் மாணவர்கள் கூட்டத்தில் இருந்து தளபதி 67 அப்டேட் கேட்டு சத்தம் எழுந்ததால்,லோகேஷ் கடுப்பாகியுள்ளார்.தயவு செய்து தளபதி 67 அப்டேட் மட்டும் கேட்காதீர்கள் என மாணவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தளபதி 67 படத்திற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டுகாரியுடன் வெறியாட்டம் போட்ட சிவகார்த்திகேயன்..PRINCE FIRST SINGLE வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : NEWS7 TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment