The Indian Times

இரண்டாவது FINAL செல்லும் போட்டியாளரை அறிவித்த செஃப் தாமு..யாரு தெரியுமா???| COOK WITH COMALI

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.தற்போது இந்த வாரம் போட்டியாளர்களுக்கு அரை இறுதி சுற்று போட்டி நடைபெற்றுள்ளது

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு அரையிறுதி சுற்றில் பங்குபெற்று தங்களால் முடிந்தவரை போராடியுள்ளனர்.வழக்கம் போல கோமாளிகள் தங்களின் நகைச்சுவையை காண்பித்து மக்களை சிரிக்க வைத்துள்ளார்கள் என்பதை வெளியாகிய ப்ரோமோவில் இருந்தே காண முடிகிறது.தற்போது இறுதியாக வெளியிட்டுள்ள ப்ரோமோவில் நடுவர் செஃப் தாமு அவர்கள் இரண்டாவதாக பைனல் செல்லும் போட்டியாளரை அறிவித்துள்ளார். ப்ரோமோவை வைத்து பார்க்கும் பொழுது முத்துக்குமார் ஆக இருக்கலாம் என தோணுகிறது ஏனென்றால் கோமாளிகள் முத்துக்குமாரை தான் சுற்றிவளைத்து கொண்டாடுகின்றனர்.எது எப்படியோ நிகழ்ச்சி வெளிவரும் பொழுது இந்த நான்கு பேரில் எந்த மூவர் இறுதி சுற்றுக்கு செல்கிறார் என தெரியும்.

Embed video credits ; vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in