The Indian Times

இந்த மணிமேகலை மேல வைக்கிற நம்பிக்கையை பாதி உன் சமையல் மேல வை..அடித்துக்கொள்ளும் மணிமேகலை மற்றும் வித்யூலேகா ..| COOK WITH COMALI

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.

கடந்த வார நிகழ்ச்சியில் கோமாளிகள் அனைவரும் பிரபல நடிகர்களின் முக்கிய படங்களின் கெட்டப்புகளில் வந்து அசதியுள்ளனர்.சமையலுக்காக போட்டியாளர்கள் போராடினால் ஒரு பக்கம் கோமாளிகள் காமெடி போரினை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் மணிமேகலை பிதாமகன் சூர்யா போல் வேடமணிந்து வந்துள்ளார்.போட்டியாளர்களுக்கு மணிமேகலையை கண்டாலே ஒரு பயம் காரணம் மனோ பாலா வெளியே செல்லும் பொழுது அவருடன் இருந்தது மணிமேகலை தான் அதேபோல் கிரேஸ் கருணாஸ் வெளியே செல்லும் போதும் இருந்தது அவர்தான்.அதன்படி தற்போது கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ரோஷினிக்கு ஜோடியாக அமைந்துள்ளார் மணிமேகலை.மணிமேகலை எண்ட்ரியாகி சூர்யா வசனமான சத்தியம் தோற்பதில்லை என ஆரம்பிக்க,மணிமேகலையை யாரும் சேர்ப்பதில்லை என கூறி அதனை முடித்துள்ளார் குரேஷி.இது காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.மேலும் மணிமேகலையை கண்டாலே வித்யூலேகா பயப்படுகிறார்,காரணம் அவர் கூறியது போல் வித்யூலேகா எலிமினேஷன் சுற்றுக்கு சென்றதால்,இந்நிலையில் இருவரும் காரசாரமாக நிகழ்ச்சியில் சண்டையும் போட்டுள்ளனர்.தற்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி

https://youtu.be/PPKLL2ewBfE

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in