ரித்திகாவை சுற்றி குத்தாட்டம் போட்ட CWC பாலா மற்றும் புகழ்….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.இதனால் நீண்ட நாட்களாக சீனத்திற்கு பக்கம் வாமல் இருந்த ரித்திகாவிற்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ரித்திகாவை சுற்றி குத்தாட்டம் போட்ட CWC பாலா மற்றும் புகழ்.... 1

விளம்பரம்

தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன்பின் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை மக்களுக்கு காண்பித்தார்.படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி வரும் இவர் அண்மையில் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.இதனை அவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார்.தனது திறமையை அடிக்கடி வெளிக்கொண்டு வரும் ரித்திகா தற்போது பாடல் பாட தொடங்கியுள்ளார்.தற்போது மேடை நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

ரித்திகாவை சுற்றி குத்தாட்டம் போட்ட CWC பாலா மற்றும் புகழ்.... 2

விளம்பரம்

இந்நிலையில் இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலிப்ரேஷன் சுற்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதில் பழைய சீசன்களில் உள்ள கோமாளிகள் கலந்துகொண்டுள்ளனர்.அதன்படி தீபா வெங்கட்,ஷகீலா,பவித்ரா மற்றும் ரித்திகா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியின் இடைவெளியில் ரித்திகா உடன் புகழ்,பாலா,தங்கதுரை ஆகியோர் நடனமாடி குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment