The Indian Times

ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்த தீபா..cwcசெட் கொஞ்சம் தான் தப்பிச்சுச்சு.| COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனை தொடர்ந்து இந்த சீசனில் புதியதாக சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.

இந்த வார நிகழ்ச்சியில் செலிப்ரேஷன் சுற்று கொண்டாடப்பட்டுள்ளது .இதற்கு முந்தய சீசன்களில் இருந்த போட்டியாளர்கள் ஷகீலா,தீபா,பவித்ரா,ரித்திகா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோக்களை தொடர்ந்து வெளியிட்டு நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த வாரம் புகழும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதால் காமெடிக்கு பஞ்சமில்லாமல் அடித்து துவைத்து எடுத்துள்ளனர் கோமாளிகள்.தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தீபா ஊஞ்சலில் அமர முயற்சித்து கீழே விழுந்துள்ளார்.இந்த ப்ரோமோ தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in