திருடன் சார் என் பைக்கை கொண்டு வந்து கொடுத்துரு.. காசு கூட தரேன் – CWC மணிமேகலை

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

திருடன் சார் என் பைக்கை கொண்டு வந்து கொடுத்துரு.. காசு கூட தரேன் - CWC மணிமேகலை 1

விளம்பரம்

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவரது வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மனதில் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் நீங்கி மனம் விட்டு சிரிப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஞானத்தை அசிங்கமாக பேசிய கரிகாலன்.. அடித்து துவைத்த கதிர்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

திருடன் சார் என் பைக்கை கொண்டு வந்து கொடுத்துரு.. காசு கூட தரேன் - CWC மணிமேகலை 2

விளம்பரம்

மணிமேகலை தனது கணவருக்காக முதல் முறையாக வாங்கிய பைக்கினை சில மாதங்களுக்கு முன்பு திருடி சென்றுவிட்டனர்.எங்கு தேடியும் அந்த வாகனம் கிடைக்கவில்லை.முதல் முறையாக வாங்கிய பைக் என்பதால் மணிமேகலை அதிகம் எமோஷனல் ஆக இருந்தார்.அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ,திருடனிடம் என் பைக்கினை கொண்டு வந்து கொடுத்துவிடு உனக்கு காசு கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. வீடியோவில் மணிமேகலை நகைச்சுவைக்காக பேசினாலும் அதில் எமோஷனல் தெரிகிறது.

கட்டாயம் படிக்கவும்  முத்துவுக்கு கார் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Behindwoods TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment