The Indian Times

தந்தை ஆகும் சிம்பு….மடியில் குழந்தையுடன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சிலம்பரசன்…

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.சிம்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்.தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.புது புது ஸ்டைலை சினிமாவில் அறிமுகப்படுத்தி இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்த சிலம்பரசன்.ஆண்கள் பெண்கள் என போட்டி போட்டு இவருக்கு ரசிகர்களாக மாறினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.தற்போது இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆன பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இப்படத்தில் இவருடன் பிரபல மலையாள நடிகை அணு சித்தாரா இணைந்து நடிக்கிறார்.படப்பிடிப்பில் கையில் குழந்தையுடன் சிம்பு அமர்ந்திருக்க அருகே அனு சித்தாரா நிற்கிறார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில அவர் பதிவிட்டுள்ளார்.பத்துதல படத்தில் அணு அவருக்கு மனைவியாகவும்,அந்த குழந்தை சிம்புவின் குழந்தையாகவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோ தற்போது வைரலாவதை தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.பத்துதல படத்தில் சிம்புவின் கெட்டப் வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in