The Indian Times

ராஷி கண்ணாவை இழுத்துகொண்டு தலைதெறித்து ஓடும் தனுஷால் பரபரப்பு

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்.தற்போது பாலிவுட் ஹாலிவுட் என எல்லா பக்கத்திலும் தனது வெற்றிக்கொடியை பறக்க விட்டு வருகிறார். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழகத்தில் உள்ளது.ரசிகர்கள் இவரை தலையில் வைத்து இவரின் வெற்றியை தங்களது வெற்றிபோல கொண்டாடி வருகின்றனர்.துள்ளுவதோ இளமை படத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் படம் வரை வெற்றிக்காக இவர் போராடிய போராட்டங்கள் பல.போராட்டத்தின் மொத்த பயனாகத்தான் தற்போது தனுஷ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியாகிய குட்டி,யாரடி நீ மோகினி,உத்தமபுத்திரன் படங்கள் எல்லாம் மாபெரும் ஹிட்.தற்போது அதை போலவே இப்படமும் ரசிகரகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதிகாலை முதலே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கு சென்று தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தினை பார்த்து வருகின்றனர்.

Advertisement

தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் காண நடிகை ராஷிகண்ணாவுடன் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார்.படம் முடிந்து வெளியே வரவும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உடனே தனுஷ் அங்கிருந்து ராஷி கண்ணா கையை பிடித்து அவரை பத்திரமாக கூட்டத்தின் நடுவே அழைத்து சென்று காரில் ஏறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது

Embed video credits : galatta tamil

Embed video credits : TamilGlitz News

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in