The Indian Times

வேட்டைக்காக BIGG BOSS வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த கமல்ஹாசன்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர்.உலகநாயகன் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் விரைவில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இதுவரை இல்லாத புதிய யுக்தியை பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இந்த முறை கடைபிடிக்க உள்ளது.இது வரை பிரபலங்கள் மட்டும் பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது பிக் பாஸ்.மேலும் கடந்த சீசன்கள் எதிர்பார்த்த வரவேற்பினை பெறாததால் இம்முறை புதிய விதிமுறைகளை கடைபிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Advertisement

தற்போது நாளை முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.உள்ளே செல்பவர்கள் யாராக இருக்கும் என பலரும் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் கமல்ஹாசன் தற்போது முதல் ஆளாக வீட்டுற்குள் சென்று சுற்றிபார்த்துள்ளார்.இந்த புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : Vijay Television 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in