The Indian Times

பாடகர் SP பாலசுப்ரமணியன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நடிகர் மைக் மோகன்

மைக் மோகன் என்றால் தெரியாத நபர்கள் இன்று வரை யாரும் இருக்கமாட்டார்கள்.அந்த அளவிற்கு ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் இவர்.இவர் படத்தில் இடம் பெற்றுள்ள பல பாடல்களும் ஹிட் அடித்து இவருக்கு மைக் மோகன் என்ற பெயரை பெற்றுத்தந்தது.இவருக்கெனே பெரும் ரசிகர்கள் கூட்டமே அந்த நேரத்தில் இருந்தது.இவர் படம் வெளியாகும் நாள் திரையரங்குகள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தான் ஓடும்,அந்த அளவிற்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர்.ரஜினி கமல் படங்களுக்கு நிகரான வசூலையும் வரவேற்பினையும் பெற்று தமிழ் சினிமாவையே அசர செய்து தன்னை திரும்பி பார்க்க செய்தார் மோகன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியாகிய கன்னட படம் ஆன கோகிலா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்தினை தொடர்ந்து கன்னடம் ,மலையாளம் மற்றும் தெலுங்கு என படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கிவிட்டார்.இவர் முதன் முதலாக 1980 ஆம் ஆண்டு மூடு பணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வேறு மொழிகளில் கிடைக்காத வரவேற்பு தமிழில் கிடைத்ததால் தமிழ் படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் மோகன்.பல வெற்றிப்படங்களை இவர் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.நடிகராக மட்டும் இல்லாமல் தமிழில் அன்புள்ள காதலுக்கு என்ற படத்தினை இயக்கி இயக்குனராகவும் சினிமாவில் கால் தடம் பதித்து விட்டார்.

Advertisement

தற்போது மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.தற்போது இவர் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஹரா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவருக்கு கதாநாயகியாக இப்படத்தில் குஷ்பு நடித்துள்ளார்.லியாண்டர் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.மோகனுக்கு மைக் மோகன் என பெயர் வர காரணம் எஸ்பி பாலசுப்ரமணியம் தான்,அவர் மோகன் படத்தில் பாடிய அணைத்து பாடல்களும் பெரும் வரவேற்பினை பெற்றதால் ஒருகட்டத்தில் ரசிகர்கள் மோகனை மைக் மோகன் என்று அழைக்க தொடங்கிவிட்டனர்.தற்போது மோகன் எஸ்பிபி நினைவிடத்தில் சென்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

Embed video credits : AmmapetGkarunagaran

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in