வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்! வைரல் வீடியோ

5 வயதிலிருந்து 50 வயது வரை அனைவரையும் நடனமாட வைக்கும் குத்துப்பாடலாக இருக்கும் பாடல் என்றால் அது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் தான். இன்று வரை பல மக்களின் பிளே லிஸ்டில் இருக்கும் இந்த பாடல் அனிருந்து இசையமைப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் திரைப்படம் எரிதிர்பார்காத அளவுக்கு வசூலை குவித்தது. கொரோன பாதிப்பின் காரணத்தால் படம் வெளியாக ஒரு வருடம் தாமதமானாலும் இந்த பாடல் முன்னதாகவே வெளியாகி அனைவரையும் கவர்ந்திழுத்தது.

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்! வைரல் வீடியோ 1

விளம்பரம்

இது வரை தமிழ் சினிமாவில் எந்த பாடலும் இதனளவுக்கு ட்ரெண்ட் ஆனது கிடையாது. ஒரு வருடம் கடந்தும் இன்றும் பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளனர். மேலும் உலகமெங்கும் உள்ள பல கோடி மக்கள் இந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ல் பதிவேற்றம் செய்துள்ளனர். மாஸ்டர் படம் உலகமெங்கும் பிரபலமடைய இந்த பாடலுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்! வைரல் வீடியோ 2

விளம்பரம்

தற்போது இந்த வாத்தி கம்மிங் பாடலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நடனமாடி பதிவிட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ருத்ராஜ் கெய்குவார்ட், ஜெகதீசன் , சாய் கிஷோர் ஆகிய வீரர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment