The Indian Times

ரஜினிகாந்த்தின் பாபா RE-RELEASE… 2022ல் படம் எப்படி இருக்கு மக்கள் கருத்து….

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. தற்போது ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகிய பாபா படத்தினை மீண்டும் வெளியிட்டுள்ளனர்.படத்தில் புதிய காட்சிகளை சேர்த்து பல காட்சிகளை கட் செய்து வெளியிட்டுள்ளனர்.ரசிகர்கள் அதிகாலை முதல் இப்படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.

Advertisement

படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படத்தில் புதிய காட்சிகளை சேர்த்துள்ளனர்,ஆனால் பல காட்சிகளை நீக்கியுள்ளனர்.படம் நல்லா இருக்கு.இப்போவும் அதே எனெர்ஜி இருக்கு படத்தை பார்க்கும் பொழுது என கூறி வருகின்றனர்,மேலும் இளம் ரஜினியை காண ஒரு முறை இப்படத்தினை கட்டாயம் பார்க்கலாம்,ஏஆர் ரஹ்மான் இசை நல்லா இருக்கு என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ஏழு மந்திரத்தினை 5 மந்திரமாக குறைச்சிட்டாங்கப்பா அது மட்டும் தான் கொஞ்சம் குறையாக இருக்கு

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in