The Indian Times

Swiggy ஓட்டிக்கொண்டு இரண்டு பெண்களை ROUTE அடிக்கும் தனுஷ்…THIRUCHITRAMBALAM TRAILER

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் .இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற நடிகர்கள் சிலர் அதில் இவரும் ஒருவர்.அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் இன்று உயர்ந்துள்ளார்.தற்போது ஹாலிவுட் வரை நடிகர் தனுஷ் கொடி பறக்கிறது. இவர் நடித்துள்ள க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் தனுஷ் தெலுங்கிலும் நேரடியாக கால்தடத்தினை பதிக்க உள்ளார்.இயக்குனர் வெங்கி இயக்கத்தில் தனுஷ் சார் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழில் வாத்தி என வெளியாக உள்ளது.அதே சமயம் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது

Advertisement

தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தனுஷுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்து அசத்தியுள்ளார்,அதேபோல் அப்பாவாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். ராஷி கண்ணா,நித்யா மேனன்,பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.தனுஷ் தனது தோழியின் உதவியோடு ராசி கண்ணா மற்றும் பவானி சங்கரை துரத்தி துரத்தி காதல் செய்து அசத்தியுள்ளார். தனுஷ் ரசிகர்கள் ட்ரைலர் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in