விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் TRAILER வெளியாகும் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் சீனு ராமசாமி.மொத்தமே 7 படங்கள் இயக்கி உள்ளார் இருப்பினும் இவரது 7 படங்களும் 70 படங்களுக்கு நிகரான வரவேற்பினை பெற்றுள்ளதால் இவர் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இவர் நடிகர் பரத்தினை வைத்து கூடல் நகர் என்ற படத்தினை இயக்கி சினிமாவில் இயக்குனராக 2007 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தென் மேற்கு பருவக்காற்று என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்று மூன்று தேசிய விருதுகளை பெற்றது.தனது இரண்டாவது படத்திலேயே தேசிய விருதினை கையில் பிடித்தார் சீனு ராமசாமி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் TRAILER வெளியாகும் தேதி அறிவிப்பு 1

விளம்பரம்

மண் மனம் மாறாமல் படத்தினை இயக்குவதால் இவர் படங்களுக்கு எப்பொழுதும் தனி வரவேற்பு உள்ளது.நடிகர் விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தினை கொடுத்ததே சீனு ராமசாமி தான்.கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே மாமனிதன் என 7 படங்களை மட்டுமே இவர் தமிழ் சினிமாவில் இயக்கியுள்ளார்.தற்போது மாமனிதன் படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.யுவன் சங்கர் ராஜா இப்படத்தினை தயாரித்துள்ளார்.ஆர்கே சுரேஷ் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட உள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் TRAILER வெளியாகும் தேதி அறிவிப்பு 2

விளம்பரம்

இவர் இயக்கி வெளிவராமல் இருக்கும் இடம் பொருள் ஏவல் படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால்,விஜய் சேதுபதி கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார்.யுவன் இசையில் லிங்குசாமி இப்படத்தினை தயாரித்துள்ளார்.இப்படம் சில பிரச்சினைகளினால் வெளியே வராமல் உள்ளது.தற்போது இப்படத்தின் டீசர் வெளியிட்டு தேதியை அறிவித்துள்ளது.நாளை தீபாவளியை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment