The Indian Times

உதயநிதி ஸ்டாலின் அதிரடியில் மிரட்டும் “கலகத்தலைவன்” TEASER இதோ

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் வலம் வருபவர்.தயாரிப்பாளர் ஆன இவர் முதல் முறையாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார் உதயநிதி.பல வெற்றி படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவை கலக்கியுள்ளார்.தற்போது அரசியலில் களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்று ஆல் ரவுண்டர் ஆக கலக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து அண்மையில் வெளியாகிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த உதயநிதி தற்போது சீரியசான கதாபாத்திரங்களில் களம் இறங்கி வெற்றியும் கண்டு வருகிறார்.அதேபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தினை தயாரித்து நடித்தும் வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கலக தலைவன் படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் .உதயநிதி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in