The Indian Times

14 நாட்கள் வீட்டில் இருந்ததற்கு ஜிபி முத்துவுக்கு இவ்வளவு சம்பளமா BIGG BOSS கொடுத்தாங்க…

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்து தனது குடும்பத்தினை காணாமல் இருக்க முடியாததால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி ஜிபி முத்து 14 நாட்கள் இருந்ததற்கு 2 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in