The Indian Times

நவராத்திரிக்காக முழு துர்க்கை அம்மனாக மாறிய பிகில் பாண்டியம்மா

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.

பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

Advertisement

அதுமட்டுமின்றி பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்,தற்போது உடல் மெலிந்து காணப்படும் ரோபோ சங்கரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது இவரை போலவே இவரது மகள் இந்திரஜா சங்கரையும் சினிமாவில் களம் இறக்கி உள்ளார். இந்திரஜா பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படதில் நடித்து இந்திரஜா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார். இப்படங்களை தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இந்திரஜா.

இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது,

தற்போது நவராத்திரியை முன்னிட்டு துர்க்கை அம்மன் அவதாரத்தில் இவர் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை பிரம்மிப்படைய செய்து உள்ளது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in