தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.
இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.
அடுத்ததாக வெளியாக வாரிசு படமும் இவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றுக்கொடுத்தது.
தற்போது இவருக்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் அக்டொபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது,தற்போது நடிகர் விஜயின் மகன் ஜேசன் விஜய் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கியுள்ளார், தனது முதல் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார்,
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது,ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in