The Indian Times

தலைவா… ரஜினிகாந்த் மேடையில் பேசும் பொழுது கத்தி கோஷம் போட்ட நடிகை மீனா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கலக்கியவர் மீனா.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.தமிழில் இவருக்கு என் ராசாவின் மனசிலே படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றுத்தந்தது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகி,குணசித்திர நடிகை என சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருபவர் மீனா.அண்மையில் பல நாட்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி அசத்திவிட்டார்.நடிகை மீனாவின் கணவர் சில நாட்களுக்கு முன்னர் தவறிவிட்டார்.இதனால் கவலையாக இருந்த மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.

Advertisement

நடிகை மீனா அண்மையில் இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.சூப்பர் ஸ்டார் மேடையில் பேசும் பொழுது அவரது தீவிர ரசிகையான மீனா தலைவா தலைவா என கத்தி கூப்பாடு போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மீனா தீவிர சூப்பர் ஸ்டார் ரசிகையா இருப்பாங்க போலயே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in