The Indian Times

கமல்ஹாசனுக்கு DIALOUGE சொல்லிக்கொடுத்த விக்னேஷ் சிவன்..வீடியோ வெளியிட்டு நெகிழ்வு

போடா போடி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் ஆகியவர் விக்னேஷ் சிவன்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இருப்பினும் நம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கினார்.இந்த படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை தமிழில் இயக்கி வருகிறார்.அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று ரூ.66 கோடி ரூபாய் வசூலையும் பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் அடுத்ததாக அஜித் குமார் வைத்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தினை இயக்க உள்ளார். இப்படத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். அண்மையில் இவருக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் முடிந்தது,திருமணம் முடிந்த கையோடு மீண்டும் தனது வேலையே தொடங்கியுள்ளார்.தற்போது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கான பாடலை விக்னேஷ் சிவன் இயக்கினார்,அதேபோல செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் துவக்க விழாவை விக்னேஷ் சிவனும் அவரது குழுவும் வெற்றிகரமாக இயக்கியுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் வீடியோவுக்கு கமல்ஹாசன் தனது குரலில் பேசியுள்ளார்.இந்நிலையில் கமல்ஹாசனுடன் இணைந்து வசனம் எழுதி அவருக்கு வசனம் சொல்லி கொடுத்துள்ளார்.இந்த வீடியோவை வெளியிட்டு கமல்ஹாசன் உடன் பணியாற்றியதற்கு நன்றி கூறி நெகிழ்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து கமல்ஹாசனை வைத்து படத்தினை எப்போ இயக்க போறீங்க என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in