பொம்மை போல வந்து BUTTA BOMMA பாடலுக்கு நடனமாடிய CWC சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பொம்மை போல வந்து BUTTA BOMMA பாடலுக்கு நடனமாடிய CWC சிவாங்கி 1

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

பொம்மை போல வந்து BUTTA BOMMA பாடலுக்கு நடனமாடிய CWC சிவாங்கி 2

விளம்பரம்

இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் அழகிய பொம்மை போல நடந்து வந்து புட்ட பொம்மா பாடலுக்கு கியூட் ஆக நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் சிவாங்கி ரசிகர்கள் பலரும் டேன்ஸ் சூப்பர் என கருத்துக்களை தெரிவித்து வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment