The Indian Times

குக்கூ குக்கூ பாடகி தீ பாடிய கர்ணன் படத்தின் உட்றாதீங்க எப்போவ் பாடல் !

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பரியேறும் பெருமாளின் மெகா வெற்றியை தொடர்ந்து காரணன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். தனுஷ் மாஸாக நடிக்கும் படத்தை விட அசுரன் போன்ற கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்களை மக்கள் இன்னும் விரும்புகிறார்கள். அசுரனின் அசுர வெற்றிக்கு பிறகு தனுஷ் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

Advertisement

இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் 3 பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிலும் கண்டா வர சொல்லுங்க பாடலை ஸ்டேட்டஸ் வைக்காத ஆட்களே இருக்க முடியாது. இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான தட்டான் தட்டான் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் பாட ரசிகர்களை பெரியளவில் கவர்ந்திழுத்தது. அதையும் தாண்டி தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தது கர்ணன் படத்தின் டீசர் வெளியீட்டிற்காக தான்.Video Embeded Via – Think Music Official Youtube Channel

Advertisement

மிக பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் கர்ணனின் புறப்பாடு என்ற தலைப்பில் கர்ணன் திரைப்பட டீசர் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது கர்ணன் படத்தின் கடைசி பாடலான உட்றாதீங்க இப்போவே பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. என்ஜாய் எஞ்சாமி பாடலின் வெற்றியை தொடர்ந்து தற்போது தீ காரணன் படத்தின் உட்றாதீங்க இப்போவே பாடலை பாடியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in