தளபதி 65 யில் நடிக்கும் பிக் பாஸ் கவின் ! வைரலாகும் புகைப்படம்

விளம்பரம்

கோலிவுட்டில் தற்போது டாப்பில் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் நடிகர் தளபதி விஜய். பல விமர்சனங்களுக்கு மத்தியில் திரைத்துறையில் நுழைந்திருந்தாலும், தற்போது இவர் தொட்ட படமெல்லாம் மெகா ஹிட்டாகி வசூலை குவிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. கடைசியாக விஜய் நடித்து பொங்கல் விருந்தாக வெளி வந்த திரைப்படம் மாஸ்டர். மாஸ்டரின் வசூல் சாதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. இந்நிலையில் தற்போது விஜய் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க இருக்கிறார்.தற்போது இன்று பெருங்குடியில் உள்ள சன் தொலைக்காட்சி ஸ்டுடியோவில் தளபதி 65 பூஜை நடைபெற்று வருகிறது.

இப்போது டிரெண்டிங்   நடிகர் சந்தானம் வாக்களித்தார்! 2021 சட்டமன்ற தேர்தல்

தளபதி 65 யில் நடிக்கும் பிக் பாஸ் கவின் ! வைரலாகும் புகைப்படம் 1

விளம்பரம்

இந்த பூஜைக்கு வந்த விஜய் செம்ம மாஸான ஹேர்ஸ்டைலுடன் சிமெண்ட் கலர் ஷர்ட் அணிந்து வந்திருந்தார். அதோடு தளபதி 65 படக்குழுவினர் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது. இதை தொடர்ந்து இந்த புகைப்படத்தில் தளபதி 65 பற்றிய புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படத்தில் வி.டி.வி கணேஷ் , தலைவா படத்தில் விஜயுடன் நடித்த சதிஷ் மற்றும் பிக் பாஸ் பிரபலம் கவின் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் டிவியின் மூலம் பிரபலமான நபர்களுள் ஒருவர் கவின் ராஜ்.

இப்போது டிரெண்டிங்   சூர்யாவுக்கு முன்பே இந்த ஒரு நல்ல விஷயத்தை சத்தமில்லாமல் செய்து முடித்த தல அஜித் !

தளபதி 65 யில் நடிக்கும் பிக் பாஸ் கவின் ! வைரலாகும் புகைப்படம் 2

கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கனா காணும் காலங்களுக்கு அடுத்து இவர் சரவணண்மீனாட்சி சீரியலில் நடித்தது அனைவரையும் கவர்ந்ததுஅதன் பிறகு கவின் விஜய் டிவி யின் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர் என்பது நிதர்சனமான உண்மை. சமீபத்தில் கூட இவரது அஸ்கு மாரோ பாடல் வெளியாகி வைரலானது. தற்போது இவர் தளபதி 65 பூஜையில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. இதை கவின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   பிரபல நடிகையை கோபப்பட்டு திட்டிய தல அஜித்! காரணம் என்ன தெரியுமா?

 

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment