The Indian Times

பொறக்குற நொடியிலே விரட்டுது காசு… துணிவு படத்தின் காசேதான் கடவுளடா VIDEO SONG இதோ….

காதல் மன்னன் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித்.1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் தல அஜித்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.இவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் இவரின் சினிமா வாழ்வுக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படம் பெரும் விமர்சையாக வெற்றிபெற்று அஜித்குமாரை தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது.பல தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து படம் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் அஜித்.வரிசையாக தோல்விகளை கண்ட பொழுது அஜித் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்து வந்து பட்டையை கிளப்பினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ்.பைக் ரேஸ் ,துப்பாக்கி சுடுதல் என பலவிதமான வித்தைகளை கற்றுக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்.இந்நிலையில் இவர் மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார்.இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை போனி கபூர் தயாரிக்க,ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.தற்போது இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Advertisement

தற்போது படக்குழு படங்களில் இடம்பெற்ற பாடல்களின் வீடியோ பாடல்களை வெளியிட்டு வருகிறது.அதன்படி தற்போது அனைவரும் எதிர்பார்த்த காசேதான் கடவுளடா என்ற பாடலை வெளியிட்டுள்ளது.இப்பாடல் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தல அஜித்தின் நடனத்தினை ரசிகர்கள் பாடலில் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.உடம்பில் பல ஆபரேஷன்கள் செய்தும் ரசிகர்களுக்காக அதிக ரிஸ்க்கை எடுக்கும் அஜித்குமாரை கட்டாயம் பாராட்டி தான் ஆக வேண்டும் .

Embed video credits : ZEE MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in