The Indian Times

யாத்ரா வாடா வாடா… ஓட்டப்பந்தயத்தில் கோப்பை வென்ற நடிகர் தனுஷ் மகன்கள்

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார்,இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு பையன்கள் உள்ளன.இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார்.இந்த செய்தி அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.மகன்கள் இருவரும் அம்மா ஐஸ்வர்யாவிடம் இருந்து வளர்ந்து வருகின்றனர்.பிரிந்து வாழ்ந்தாலும் தனது மகனின் பள்ளி நிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது.

Advertisement

தற்போது நடிகர் தனுஷ் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா பள்ளி விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.அதில் யாத்ரா ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு முதல் பரிசை பெற்றுள்ளார்.இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினி பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை யாத்ரா மற்றும் லிங்காவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in