கேஜிஎப் பட இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி விஜய்! தளபதி 67 புதிய அப்டேட்

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். வெறும் 50 சதவீத இருக்கையில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் படம் மிக பெரிய வசூலை குவித்தது.

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

கேஜிஎப் பட இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி விஜய்! தளபதி 67 புதிய அப்டேட் 1

விளம்பரம்

இந்நிலையில் அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்த படத்தை கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து தற்போது தளபதி 66 மற்றும் தளபதி 67 படத்திற்கான அப்டேட்கள் குவிந்து கொண்டிருக்கின்றது. தளபதி 66 படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதை பற்றிய எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளி வரவில்லை. தற்போது தளபதி 67 படத்திற்கான அப்டேட் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

கேஜிஎப் பட இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி விஜய்! தளபதி 67 புதிய அப்டேட் 2

விளம்பரம்

தெலுங்கு சினிமாவில் பெரிய நடிகர்களை வைத்து பேன் இந்தியன் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் தில் ராஜு. இவர் தற்போது விஜய் 67 படத்தை தயாரிக்கப்போகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாது இந்த படத்தை கே.ஜி.எப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பிரஷாந்த் நீல், பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து தளபதி 67 அல்லது தளபதி 68 படத்தை பிரஷாந்த் நீல் இயக்க போகிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment