The Indian Times

நடனத்தில் நஸ்ரியாவை ஓரமாக உட்கார வைத்து MASS காட்டிய நம்ம கயல்…

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது சைத்ராவிற்காகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நடிப்பு மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட இவர் அதற்காக கன்னட சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடித்தார்.பின்னர் அங்கிருந்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்துவிட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கன்னடத்தினை விட தமிழக மக்கள் தான் இவருக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இதனை தொடர்ந்து மேலும் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது,அதுவும் கதாநாயகியாக, அதனை சரியாக பயன்படுத்தி தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார்

பல குடும்ப தலைவிகள் சைத்ராவை தங்களது இல்லத்தில் இருக்கும் ஒரு பெண்ணாக தான் பார்த்து வருகிறார்கள்.இவர் அடிக்கடி நடனம் ஆடி வெளியிடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பெருமளவு வைரலாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் தனது சக நடிகர் உடன் நஸ்ரியா பாடலுக்கு கலக்கல் நடனம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த சைத்ரா ரசிகர்கள் நஸ்ரியாவை விட நீங்க தான் சூப்பரா நடனம் ஆடுகிறீர்கள் என கூறி அவரை புகழ்ந்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in