The Indian Times

என்ன அமீரும் பாவனியும் கல்யாணம் பண்ணிட்டாங்களா.. | BIGG BOSS JODIGAL SEASON 2

விஜய் தொலைக்காட்சி ஆண்டு தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் நடத்தி வருகிறது.இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது இந்த நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வருபவர்களை வைத்து விஜய் டிவி BIGG BOSS ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.அவ்வாறு நடைபெற்ற முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் இணைந்து ஆடி டைட்டிலை தட்டி சென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் பலத்த வரவேற்பினை அளித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீசனில் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,பாவனி மற்றும் அமீர் ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் அசத்தி வருகின்றனர்.ஜோடிகள் அனைவரும் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தங்களது சிறப்பான நடனத்தினை காண்பித்து இவர்களுக்குள் இப்படி ஒரு நடன திறமையா என கண்டு ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு நடனம் ஆடி வருகின்றனர்.இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது

இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் ஆஹா கல்யாணம் என்ற சுற்றில் நடனமாடி வருகின்றனர்.இந்நிலையில் பாவனி மற்றும் அமீர் இருவரும் திருமண கோலத்தில் குத்தாட்டம் போட்டு திருமணம் செய்துகொண்டது போல் நடனமாடியுள்ளார்கள்.இந்த இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் என்ன உண்மையாகவே கல்யாணம் நடந்து போலவே இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் இவர்கள் ரசிகர்கள் இதுபோல் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in