The Indian Times

வாரணம் ஆயிரம் சூர்யா சிம்ரன் போல் PAVANI உடன் காதல் ஆட்டம் போட்ட AMIR ….

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்,அதற்கு வீட்டை விட்டு வெளியே வந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறார் . பாவனி தனது காதலை என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வர் என காத்துக்கொண்டுள்ளார் அமீர்.தற்போது இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகின்றனர்.எப்படியாவது பாவனியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவில் உள்ளார் பாவனி.பாவனி குடும்பத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் அமீரை பிடித்து விட்டது.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பாவனியும் அமீரும் ஜோடியாக கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் எப்போ கல்யாணம் பண்ண போறீங்க என ரசிகர்கள் கேள்வி கேட்டதற்கு வழக்கம்போல மழுப்பலாகவே பாவனி பதில் கூறியுள்ளார்.இருவரும் எப்பொழுது திருமணம் செய்துகொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்த நிகழ்ச்சியில் ரசிகர் பாடல் பாட இருவரும் ரொமான்டிக் ஆக நடனம் ஆடியுள்ளார்கள்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஜோடி பொருத்தம் என கூறி கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Embed video credits : CINIMA ARTIST

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in