The Indian Times

அம்பி விக்ரம் போல் அச்சு அசல் நடித்த தாலாட்டு சீரியல் ஸ்ருதி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி என்று சொல்வதை விட தென்றல் நாடக கதாநாயகி துளசி என்று கூறினால் தான் இன்று வரை பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு இவர் தென்றல் நாடகத்தில் நடித்து அனைவரது மனதினையும் தென்றல் போல்தீண்டினார்.சின்ஹா நாடகத்தின் மூலம் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.அந்தளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ருதி.நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ருதி வாய்ப்பு தேடிய பொழுது இவருக்கு மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி இவர் முதன் முதலில் 1995 ஆம் வெளியாகிய அக்ராஜன் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.மேலும் தளபதி நடிப்பில் வெளியாகிய மாண்புமிகு மாணவன் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படி வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நடித்து வந்த இவர் தென்றல் எனும் நாடகத்தில் அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.இந்த நாடகம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல நாடகங்களில் நடித்தார் .தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதனால் அடிக்கடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் அசத்துபவர் என்பது இவர் வெளியிடும் வீடியோவின் மூலம் தெரிகிறது.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர்களை போல நடித்தும் வீடியோ வெளியிடுவார்.இந்த வீடியோக்கள் எல்லாம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இன்று இவர் அம்பி விக்ரம் போல் நடித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதியின் நடிப்பினை பாராட்டி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in