The Indian Times

கோடியில் ஒருவன் படத்தின் விமர்சனம்! Vijay Antony | Aathmika

இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மீசையை முறுக்கு ஆத்மிக்கா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சூப்பர் சுப்புராயன், ராமசந்திர ராஜு, மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை என்னவென்றால் , விஜய் ஆண்டனியின் தாய் தன் மகனை கலெக்டர் படிக்க வைக்க

Advertisement

வேண்டும் என்று ஆசைப்படுகிறார். விஜய் ஆண்டனியும் தன் தாயின் ஆசையை நிறைவேற்ற கலெக்டர் படிக்கிறார். முதலில் படம் கோம்பையில் துவங்குகிறது. பிறகு விஜய் ஆண்டனி ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக சென்னைக்கு கிளம்பி வருகிறார். இங்கு வந்த பிறகு அவர் தாங்கும் இடத்தில அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்கிறார். அதோடு இளைஞர்களையும் நாள் வழி படுத்துகிறார் ஹீரோ. பிறகு அவர் தாங்கும் இடத்தில

Advertisement

இருக்கும் பிரெச்சனைகளை சரி செய்ய போய் அங்கு இருக்கும் கவுன்சிலர் மற்றும் சில அரசியல் அதிகாரிகளிடம் பகையை வளர்த்து கொள்கிறார். இந்த பேச்சனைகளை விஜய் ஆண்டனி எப்படி சரிசெய்தார் , அவர் தாயின் ஆசையை நிறைவேற்றினாரா என்பதே படத்தின் கதை. இன்று இந்த படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதுவரை மக்களிடமிருந்து இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு தன் கிடைத்து வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in