The Indian Times

“நமக்கு எப்பவுமே தல தோனி தான்.. !” STR ன் புதிய வீடியோ

Watch the video below தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த சிம்பு இன்று வரை பல லட்ச ரசிகர்களோடு நிலைத்து நிற்கிறார். நடுவில் திடீரென உடல் எடையை கூட்டிய சிம்பு , தன்னை நம்பியுள்ள ரசிகர்களுக்காக உடல் இடையை குறைத்து மீண்டும் பழைய சிம்பு போல வந்துள்ளார்.இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த

Advertisement

படத்துக்கு போட்டியாக வெளியாகிறது. இதை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு புகைப்படம் பகிர்ந்திருந்தார். தற்போது மீண்டும் நடக்க இருக்கும் ஐ.பி.எல்.இல் சென்னை அணிக்காக பாடல் பாடிய புகைப்படம் ஒன்று வெளியிட்டுருந்தார் சிம்பு. இந்நிலையில் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஒரு நிகழ்ச்சியில் சென்னை அணிக்காக கலந்து கொண்டுள்ளார் சிம்பு. தற்போது அந்த ப்ரோமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in