The Indian Times

படத்தோட ஹீரோவே கதையெல்லாம் கேக்காம தான் நடிச்சுட்டு இருக்காரு! விஜய் சேதுபதியை கலாய்த்த Blue Sattai மாறன்

நேற்று ஓ.டி.டி யில் வெளியான திரைப்படம் அனபெல் சேதுபதி. இந்த படத்தில் விஜய் சேதுபதி , டாப்ஸீ பான்னு , ராதிகா, யோகிபாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் தீபக் சுந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஹாரர் காமெடி திரைப்படம் என்பது ட்ரைலரிலேயே தெரிவிக்கப்பட்டது. இந்த பாடத்தின் டிரைலரும் சரி பாடங்களும் சரி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த படத்தின் மேல் அதிக எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்தது. ஆனால் அதை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை. இந்த படத்திற்கு இது வரை

Advertisement

கலவையான விமர்சனங்கள் மட்டுமே வருகிறது. முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்று சன் டிவியில் வாரந்தோறும் வரும் நிகழ்ச்சியை தான் அனைவரும் பார்ப்பார்கள். ஆனால் இப்போது youtube சானலில் பலர் எந்த புது படங்கள் வந்தாலும் உடனே விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு விடுகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சனம் என்றாலே பலரும் பார்ப்பது ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் தான். அந்த வகையில் தற்போது இவர் நேற்று வெளிவந்த அனபெல் சேதுபதி படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். திகிலும் கிடையாது காமெடியும் கிடையாது இந்த படத்தில் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். Watch the video belowVideo embeded credits to Tamil Talkies youtube channel 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in