The Indian Times

விஜய் தேவர்கொண்டாவை KNOCKOUT செய்த லெஜெண்ட் அண்ணாச்சி

நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் லிகர்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது காரணம் இப்படத்தில் நிஜ பாக்ஸர் மைக் டைசன் நடித்துள்ளார்.குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.இவர்களுடன் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார்.இப்படத்தினை தர்மா ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

Advertisement

இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் செலவில் எடுக்கப்பட்டு மேலும் மைக் டைசன் வரைக்கும் படத்தில் நடிக்க வைத்து படம் மண்ணை கவ்வியது விஜய் தேவர்கொண்டா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்துள்ளது.மேலும் இப்படம் விஜய் தேவர்கொண்டா சினிமா வாழ்கையில் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.தற்போது இப்படத்தினை விட லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியாகிய தி லெஜெண்ட் திரைப்படம் நன்றாக இருப்பதாக பிரபல ரிவியூ தளம் ரிப்போர்ட் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது

Advertisement

பிரபல ரிவ்யூ தளமான IMDB விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகிய லிகர் படத்திற்கு 1.7/10 என்ற மதிப்பெண்களை அளித்துள்ளது.அதே சமயம் அண்ணாச்சி சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் படத்திற்கு 4.8/10 என்ற மதிப்பெண்களை வழங்கி உள்ளது.இதன்முலம் லிகர் படத்தினை விட லெஜெண்ட் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in