The Indian Times

மனதை வருடும் தனுஷ் குரலில் மயக்கமா கலக்கமா பாடல் வெளியாகியது- திருச்சிற்றம்பலம்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் நடித்துள்ளார் திருச்சிற்றம்பலம் படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.சன் பிக்சர் தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.தனுஷ் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கும் நான்காவது படமாகும்.இதற்கு முன்னாள் நடித்த குட்டி,யாரடி நீ மோகினி,உத்தமபுத்திரன் படங்கள் பெரும் ஹிட் அடித்தது.இதனால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.இப்படத்தில் நித்யா மேனன்,ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகளாக நடித்துள்ளனர்.பாரதி ராஜா பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இவர்களுடன் நடித்துள்ளனர்.

Advertisement

ரசிகர்களிடம் இப்படமும் படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.தனுஷ் ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் படத்தினை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.ரசிகர்கள் தொடர்ந்து இப்படத்தின் பாடல்களை கேட்டு வருவதாக இணையத்தில் மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.தற்போது இப்படத்தில் அனைவரும் எதிர்பார்த்த மயக்கமா கலக்கமா என்று தனுஷ் தனது குரலில் பாடிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இனி இந்த பாட்டு தான் திரும்ப திரும்ப எங்கள் காதுகளில் ஒலிக்கும் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in