The Indian Times

ரோஷும் மணிமேகலையும் சேர்ந்தாலே அலப்பறை தாங்கல…போடுற ஆட்டத்தை பாருங்க நீங்களே

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கி அதிலும் வெற்றிபெற்றுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பெரிதும் கவரப்பட்ட உறவு என்றால் ரோஷினி மணிமேகலை உறவு தான்.ஆரம்பத்தில் விளையாட்டாக மணிமேகலை ரோஷினியை வெளியே அனுப்புவேன் என்று கூறி வந்தாலும் இடையில் ரோஷினி உண்மையாகவே வீட்டை விட்டு வெளியேறும்பொழுது மணிமேகலை கதறி அழுதார்.அதில் இருந்து இவர்கள் நட்பு எல்லோருக்கும் பிடிக்க தொடங்கியது மேலும் இவர்களுக்குள்ளும் நல்ல நல்ல நட்பு ஏற்பட்டது.குக் வித் கோமாளி ரசிகர்கள் அதிகம் கேட்பது மணிமேகலை ரோஷினி இணைந்து சமைக்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் நிகழ்ச்சியும் முடிந்தது.

Advertisement

நல்ல நண்பர்களை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆகிய மணிமேகலையும்,ரோஷிணியும் அண்மையில் சந்தித்துள்ளனர்.அப்போது சந்திப்பினை மேலும் இனிமையாக்க இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ செய்துள்ளனர்.இந்த வீடியோவில் ரோஷிணியும் மணிமேகலையும் மரண குத்தாட்டம் போட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.மேலும் இவர்களுடன் கோமாளி சக்தியும் நடுவே கிடந்தது நடனமாடியுள்ளது பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.நீண்ட நாட்கள் கழித்து இவர்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in