The Indian Times

இது ஓவியாவா இல்லை LOSLIYA-வா.. பெரும் குழப்பம் ஆகிய ரசிகர்கள்

இலங்கை சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா .இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார்.தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3யில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி போட்டியாளராக களம் இறங்கினார்.இதன்மூலம் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா தனது கடின முயற்சியால் தற்போது பிரபலங்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

Advertisement

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் யாரும் அவ்வளவு எளிதாக படவாய்ப்புகள் கிடைப்பதில்லை.லாஸ்லியாவின் அதிர்ஷ்டம் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்ததை தொடர்ந்து படவாய்ப்புகள் தொடர்ச்சியாக லாஸ்லியாவிற்கு வர தொடங்கின.ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்

Advertisement

தற்போது இவர் உடல் எடையை குறைத்து முற்றிலும் ஆளே மாறியுள்ளார்.இவர் உடல் எடை குறைத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படம் ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.மிகவும் உடல் எடை மெலிந்து அடையாளமே தெரியாமல் லாஸ்லியா ஆகியுள்ளதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in