The Indian Times

அப்பா என்னை விட்டுட்டு போயிட்டீங்களே… தந்தையின் உடலை மயானத்தில் கண்டு கலங்கி நிற்கும் அஜித்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையே அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.இப்படமும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கான வேலைகள் தொடங்கியுள்ளது.

Advertisement

இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலை உ யி ரி ழந்துள்ளார்.இவருக்கு வயது 84 ஆகும்.இந்த செய்தி இன்று காலை ஊடகங்களில் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் அஜித்தின் தந்தைக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.தற்போது அஜித் தனது தந்தையின் உடலை மையனத்திற்கு அடக்கம் செய்ய சென்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.தனது தந்தையின் முகத்தினை பார்த்து அஜித் கலங்கி நின்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Embed video credits : POLIMER TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in