The Indian Times

சீக்கிரம் வாடா… விக்னேஷ் கையை இறுகப்பிடித்து நடந்து சென்ற நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

Advertisement

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து அண்மையில் நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை

Advertisement

தற்போது நயன்தாரா தனது அடுத்தபட வேலைகளை தொடங்கியுள்ளார்.இந்நிலையில் விமான நிலையத்தில் தனது காதல் கணவர் விக்னேஷ் சிவன் கையை இறுகப்பிடித்து நடந்து சென்றுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ரசிகர்கள் புகைப்படத்தினை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in