இருட்டு, காகம், மாடு..என்ன சொல்ல வருகிறது மாமன்னன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் | Maamannan First Look | Udhayanidhi Stalin

தமிழ் திரையுலகில் சிலர் மட்டுமே சமூக அக்கறை சார்ந்த படங்களை எடுப்பது உண்டு் வெறும் பொழுதுபோக்கு மட்டுமே திரைப்படங்கள் இல்லை. அதைத்தாண்டிய சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ள இயக்குனர்களும் தமிழ்திரை உலகில் இருக்கவே செய்கின்றனர். அந்த வகையில் உள்ள ஒருவர் தான் மாரி செல்வராஜ். இவர் திரையுலகில் “பரியேறும் பெருமாள்” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். சமூகத்தில் நடக்கும் சாதிய ஆணவக் கொலைகளை மையமாக வைத்து இந்த படத்தை அவர் இயக்கினார். முதல் படத்திலேயே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

இருட்டு, காகம், மாடு..என்ன சொல்ல வருகிறது மாமன்னன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் | Maamannan First Look | Udhayanidhi Stalin 1

விளம்பரம்

அடுத்ததாக அவர் நடிகர் தனுஷடன் இணைந்து “கர்ணன்” படத்தை இயக்கினார். இரு ஊர்களுக்கு நடக்கும் சாதிய மோதலை மையமாக கொண்ட கதையை அவர் இயக்கினார். இந்த படமும் வேற லெவல் ஹிட் அடித்தது. இப்படி முதல் இரண்டு படங்களையும் வெற்றிப்படங்களாய் கொடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் கை கோர்க்க உள்ளார் மாரி செல்வராஜ். இந்த படத்தின் படப்பிடப்பு வருகின்ற நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. Youtube video code embed credits: IndiaGlitz

இருட்டு, காகம், மாடு..என்ன சொல்ல வருகிறது மாமன்னன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் | Maamannan First Look | Udhayanidhi Stalin 2

விளம்பரம்

நேற்று மாரிசெல்வராஜ் இயக்க உள்ள புது படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் கிடைத்தது. அதன்படி இன்று படத்தின் பெயரையும், படத்தில் நடிக்கவுள்ள நடிகர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளது படக்குழு. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத்பாசில், வைகைப்புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இதை ஏ.ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch video below..

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment