The Indian Times

அவரை மாதிரி ஒரு Pure Soul பாக்க முடியாது..புனீத் பற்றி பேசும் போது கதறி அழுத பிரியா ஆனந்த் | Puneeth Rajkumar

கன்னட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் புனித் ராஜ்குமார். மக்கள் அவ்வளவு எளிதில் தங்கள் மனங்களில் இடம் கொடுத்துவட மாட்டார்கள். ஆனால் கர்நாடக மக்களின் ஒட்டுமொத்த மனங்களையும் வென்ற ஒரு நடிகர் என்றால் அது புனித் ராஜ்குமார் அவர்கள்தான். நடிப்பை தாண்டிய அவரது மனிதநேயம், மக்களுக்கு உதவும் குணம் ஆகியவற்றால் இன்றும் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. அப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் அவர் 2021ம் ஆண்டு மாரடபைப்பால் பெங்களூருவில் காலமானர்.

Advertisement

 

உடற்பயிற்சி, ஜிம்மில் ஒர்க்அவுட் என உடல்நலனை பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்தி வந்தார். ஆனால் 29 அக்டோபர் 2021 காலை உடற்பயிற்சி முடிந்து வீட்டின் மாடிப்படியில் அமர்ந்து இருந்தவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே அவர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
இந்த சிசிடிவி காட்சிகள் வெளியான போது அவரது ரசிகர்கள் கண்ணீரில் துடிதுடித்துப் போயினர். அவர் மறைந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அவர் கடைசியாக நடித்த ஜேம்ஸ் படம் வெளியாக உள்ளது. அதன் pre release ஷோ இன்று நடைபெற்றது. Youtube Video Code Embed Credits: Behindwoods TV

Advertisement

அதில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்த பிரியா ஆனந்த் கலந்து கொண்டார். அவரிடம் பேட்டி எடுத்தபோது புனித் பற்றி பேச முடியாமல் அவர் கண்கலங்கினார். புனித் மாதிரி ஒரு நல்ல மனிதரை பார்க்கவே முடியாது என்று அவர் கூறினார். மேலும் அவருடன் நடித்த நாட்களை மறக்க முடியவில்லை என்றும் அவரின் சிரிப்பை மறக்க முடியவில்லை என்று கூறும்போது அவரால் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கதறி அழுதார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in